சனாதனத்தை இந்து மதமாக புரிந்துகொள்ளும் வட மாநில மக்கள்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்

சனாதனத்தை இந்து மதமாக புரிந்துகொள்ளும் வட மாநில மக்கள்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்
Updated on
1 min read

காரைக்குடி: வட மாநில மக்கள் சனாதனத்தை இந்து மதமாக புரிந்து கொள்கின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டமானாலும் அமலுக்கு வராது. இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகிய 2 தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் 2024, 2029-ல் நடக்கும் மக்களவைத் தேர்தல்களில் அமலுக்கு வராது. 2034-ம் ஆண்டு தேர்தலில் அமலுக்கு வந்தால் மகிழ்ச்சி. அமலுக்கு வராத சட்டத்துக்கு ஏன் விழா கொண்டாட வேண்டும்?

சனாதன தர்மத்தை தமிழகத்தில் சாதீய பிரச்சினை, 4 வர்ணங்கள் என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால் வடமாநிலங்களில் இந்து மதமாக புரிந்து கொள்கின்றனர்.

அதிமுகவுக்கு பாஜக பிளஸ் கிடையாது. மைனஸ் தான். பாஜ கூட்டணியால் அதிமுகவுக்கு எந்த லாபமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in