

சென்னை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் ரத்து செய்தல், எமிஸ் பதிவேற்றப் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்தல் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டம் சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.
இந்த போரட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா தலைமைச் செயலத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்விததுறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.