Published : 30 Sep 2023 08:24 AM
Last Updated : 30 Sep 2023 08:24 AM
சென்னை: எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா வரும் அக்.3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து எஸ்ஆர்எம் பல்கலை. வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நமது தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உலக மருத்துவக் கல்வி கூட்டமைப்பு அண்மையில் அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவ பட்டதாரிகள் உலகம் முழுவதும் பயிற்சி மேற்கொள்ள முடியும். உலக மருத்துவக் கல்வி கூட்டமைப்பின் தலைவராகப் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் பொற்கொஸ் பொறுப்பு வகிக்கிறார்.
இவர் அக்.3-ம் தேதி நடைபெறவுள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார்.
நிகழ்ச்சியில் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தைப் பிரபலப்படுத்தும் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பத்மஸ்ரீ விருது பெற்ற வைத்தியா ராஜேஷ் கோட்சா, சந்திரயான்-3 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் இயக்குநர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT