Published : 29 Sep 2023 06:08 AM
Last Updated : 29 Sep 2023 06:08 AM

தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரிவாக்கம்

சென்னை: திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனைக் குழுதலைவராக சேகர் ரெட்டி 3-வது முறையாக நியமிக்கப்பட்டார். அவருக்கு தி.நகரில் உள்ளபெருமாள் கோயிலில் திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கருணாகர் ரெட்டி, சேகர் ரெட்டி ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு நடைபாதையாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூர் - திருப்பதி, பெரியபாளையம் -திருப்பதிசாலையில் தங்கும் சத்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. தி.நகர் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு பிரம்மாண்டமாகக் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.19 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பூமி பூஜை அடுத்த 6 மாதத்தில் நடைபெறும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x