எய்ம்ஸ் ‘ப்ரீ டெண்டர்’ கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு: மக்களவை தேர்தலுக்காக கண்ணாமூச்சி ஆட்டமா?

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையின் `ப்ரீ டெண்டர்' விண் ணப்ப கால அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளியில் திருத்தங்கள் மேற்கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறதா? அல்லது மக்களவைத் தேர்தலுக்காக ஒப்பந்தப் புள்ளியை வைத்து கண்ணா மூச்சி ஆட்டம் நடத்தப்படுகிறதா? என கேள்வி எழுந்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க 2018 ஜூனில் தோப்பூரில் 224.24 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி மத்திய சுகாதாரத் துறையிடம் ஒப்படைத்தது. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தின் மொத்த மதிப்பீடான ரூ.1977.80 கோடியில், 82 சதவீதமான ரூ.1627.70 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைய்கா நிறுவனமும், 18 சதவீத தொகையான ரூ.350.10 கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுவதற்காக பிரதான ஒப்பந்தப் புள்ளிக்கு முந்தைய ‘பிரீ டெண்டர்’க்கு கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வரை விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

அதில், 870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை மையம், 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை அறைகள், 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் படிக்கக்கூடிய வகுப்பறைகள், மாணவர்கள் தங்கும் விடுதி, இயக்குநர்களுக்கான தங்கும் இல்லம், வணிக வளாகம் ஆகியவை கட்ட திட்டமிட்டப் பட்டுள்ளது.

இரு கட்டங்களாக 33 மாதங்களில் கட்டி முடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளியில் நிபந்தனை கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ப்ரீ டெண் டரில் பங்கேற்கும் நிறுவனங் களுக்கு முன் தகுதி விண்ணப்பகால அவகாசம் வரும் அக்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எய்ம்ஸ் பற்றிய தகவல்களை ஆர்டிஐ மூலம் பெறும் சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘ப்ரீ டெண்டர் கான தேதி மீண்டும் மீண்டும் மாற்றப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது. முதலில் செப். 18 வரை விண்ணப்ப கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு திருத்தப்பட்டு அக்.3-க்கு திடீரென்று மாற்றப்பட்டது.

தற்போது மீண்டும் தேதி திருத்தப்பட்டு விண்ணப்ப கால அவகாசம் அக்.6-க்கு மாற்றப் பட்டிருக்கிறது. இதில் படுக்கைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அனுபவமின்மையால் ஒப்பந்தப் புள்ளிக்கான காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறதா? இல்லை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்க மத்திய அரசுக்கு ஆர்வமில்லையா? என்று ஐயம் உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்பந்தப் புள்ளி கோரும் விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சரியான கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in