குடிநீர் வரிகளை செப்.30-க்குள் செலுத்த சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

குடிநீர் வரிகளை செப்.30-க்குள் செலுத்த சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: குடிநீர், கழிவுநீர் வரிகள் மற்றும் கட்டணங்களை செப்.30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், குடிநீர் கட்டணங்களையும் 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டின் கடைசி நாளான செப்.30-ம் தேதிக்குள் செலுத்தி மேல்வரியை தவிர்க்கலாம்.

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில் இயங்கும் வசூல் மையங்களும் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும். அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் ஆன்லைன் கேட்வே-வை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பாங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம். இ-சேவை மையங்கள் மற்றும் யூபிஐ, கியூஆர் குறியீடு, பிஓஎஸ் இயந்திரம் போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in