தொடர் விடுமுறையால் விமான கட்டணம் திடீர் உயர்வு

தொடர் விடுமுறையால் விமான கட்டணம் திடீர் உயர்வு
Updated on
1 min read

சென்னை: பொதுவாக பண்டிகை காலங்களில், விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறை வருவதால் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால், விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லவழக்கமான கட்டணம் ரூ.9,720.ஆனால் செப். 28-ம்தேதி (இன்று)செல்ல கட்டணம் ரூ.32,581. நாளையபயண கட்டணம் ரூ.28,816.

துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558. இன்று பயணிக்க ரூ.21,509-ம், நாளை பயணத்துக்கு ரூ.20,808-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல, சிங்கப்பூருக்கு (வழக்கமான கட்டணம் ரூ.9,371) இன்று பயணிக்க ரூ.20,103,நாளை பயணிக்க ரூ.18,404 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மலேசியாவின் கோலாலம்பூர், இலங்கையின் கொழும்புக்குச் செல்லவும் கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து மைசூரு செல்ல (வழக்கமான கட்டணம் ரூ.2,558) இன்று ரூ.7,437, நாளை ரூ.5,442-ம், கோவா செல்ல (வழக்கமான கட்டணம் ரூ.4,049) இன்று ரூ.8,148, நாளை ரூ.9,771 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், சென்னையில் இருந்துமதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சென்னைவிமானம் நிலையத்தில் நடப்பாண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in