

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றப்பட்டது தொடர்பாக பெண்ணின் கணவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் மனோகர் கூறும்போது, "இதயப் பரிசோதனைக்கு வந்த ஜோதிக்கு, ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தநாள அடைப்புகள் சரிசெய்யப்பட்டன. ஒருவாரம் கழித்து அவரது வலது கையிலும், கால்களிலும் பிரச்சினை ஏற்பட்டது. அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண்ணின் உயிரைக்காப்பாற்ற வேண்டியிருந்ததால், கணவரின் அனுமதியுடன் வலது கை அகற்றப்பட்டது. இது ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் அரிதான ரத்த உறைதல் நோய். ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு முன்பு ரத்த உறைதல் ஏற்படும் என்பது தெரியவில்லை" என்றார்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “பெண்ணின் சிகிச்சையில் தவறு நடைபெறவில்லை. எதிர்க்கட்சித் தலைவரோ, முன்னாள் அமைச்சரோ ஏதேனும் ஒரு மருத்துவரை அழைத்து ஆய்வு செய்யலாம்” என்றார்.