குடிநீர், கழிவுநீர் கட்டணங்கள் அக்.1 முதல் ரொக்கமாக பெறப்படாது: இ-சேவை மையம், இணையவழியில் செலுத்த அறிவுறுத்தல்

குடிநீர், கழிவுநீர் கட்டணங்கள் அக்.1 முதல் ரொக்கமாக பெறப்படாது: இ-சேவை மையம், இணையவழியில் செலுத்த அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: அக். 1-ம் தேதி முதல் குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் ரொக்கமாக பெறப்படாது என்றும் இ சேவை மையங்கள் வாயிலாகவும், டிஜிட்டல், காசோலை மற்றும் வரைவோலைகளாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியத்துக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள், இணைப்புக் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை வரும் அக். 1-ம் தேதி முதல் இ-சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல், காசோலை அல்லது வரைவோலைகளாக மட்டுமே செலுத்த வேண்டும். ரொக்கமாக பெறப்பட மாட்டாது.

அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் வழக்கம்போல் இயங்கும். மேலும், பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் அக்.1 முதல் செயல்படாது. டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவும் வாரியம் இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை காசோலை (Cheque) மற்றும் வரைவோலைகளாக (Demand Draft) செலுத்தும் வகையில் நுகர்வோர் வசதிக்காக அனைத்து பகுதி மற்றும் பணிமனை அலுவலகங்களில் இதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நுகர்வோர் தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தவாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதவிர, நுகர்வோர் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட், டெபிட் கார்டுகள். நெட் பாங்கிங்மூலம் பணம் செலுத்தலாம். யுபிஐ,க்யூஆர் கோடு, விற்பனை முனையஇயந்திரம் (பிஓஎஸ்)போன்றகட்டண முறைகளை பயன்படுத்தியும் செலுத்தலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in