Published : 27 Sep 2023 06:20 AM
Last Updated : 27 Sep 2023 06:20 AM
சென்னை: நாகை மாவட்டம் திருக்குவளை அருகே காய்ந்த குறுவை நெற்பயிர்கள் நேற்று முன்தினம் டிராக்டர் மூலம் அழிக்கப்படுவதைப் பார்த்து மனமுடைந்த விவசாயி ராஜ்குமார் நெஞ்சு வலியால் வயலில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால், கண்ணீர் விட்டுக் கதறிய ராஜ்குமார், உயிர் இழந்தது தாங்கொணாத் துயரத்தைத் தரு கிறது. அவரை இழந்து வாடும் குடும் பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். விவசாயி ராஜ்குமார் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கி ஆதரிக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் நிவாரண உதவி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு இனிமேலாவது மனமிறங்கி காவிரித் தாயை விடுதலை செய்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ‘நானும் டெல்டாக்காரன்தான்’ என்று பெருமை பேசும் முதல்வர், டெல்டா விவசாயிகளை உடனடியாக காப்பாற்ற அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த விவசாயி ராஜ்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்குத் தேவையான தண்ணீரை பெற்றுத்தர வேண்டிய கடமையை நிறை வேற்றுவதில் தமிழக அரசு பெரும் தோல்வி அடைந்து விட்டது. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ராஜ்குமார் குடும்பத் துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, சேதமடைந்த குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உயிரிழந்த விவ சாயி ராஜ்குமாரின் குடும்பத்தின ருக்கு உரிய இழப்பீடு வழங்கு வதோடு, உரிய அழுத்தம் கொடுத்து கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத் துக்கான நீரை பெற்றுத்தந்து விவசாயிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சாமி.நட ராஜன்: பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதிர்ச்சி மரணம் அடைந்த விவசாயி ராஜ்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT