

சென்னை: ‘திமுகவின் சமூக நீதிச்சாதனை மகுடத்தில் மற்றுமோர் வைரம்’ என்று அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பெண் ஓதுவார்களை நியமித்தது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஓதுவார் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:
சமத்துவத்தை நோக்கிய தமிழினத்தின் பயணத்தில் மற்றுமோர் மைல்கல். திமுகவின் சமூகநீதிச் சாதனை மகுடத்தில் மற்றுமோர் வைரம். சுருங்கச்சொன்னால் திராவிட இயக்கப் பற்றாளர்கள் புகழ்வதுபோல், ‘பெரியாரின் நெஞ்சில் திராவிட மாடல் அரசு வைக்கும் பூ’. அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.