

கிருஷ்ணகிரி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முகநூலில் பரப்புரை செய்த கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் முருகேசன் (42). இவர் தன் முகநூல் பக்கத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, அரசுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்ளுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் முருகேசன் மீது பர்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.