Published : 26 Sep 2023 05:50 AM
Last Updated : 26 Sep 2023 05:50 AM

சென்னை பல்கலை.யில் பேராசிரியர்களை நியமிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் தேவைப்படும் பேராசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தகல்வியை போதிக்கும் கல்லூரிகளும், பேராசிரியர்களும் சிறப்பாக பணியாற்ற போதுமான கட்டமைப்பு வசதிகளும், அவற்றுக்கான நிதியும் போதுமானதாக இருக்கிறதா என்றால் இல்லை.

சென்னை பல்கலைக்கழகம், தனக்கென பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பல்வேறு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உருவாக அடித்தளமாக விளங்கும் சென்னை பல்கலைக்கழகம், தற்போதுவரை இந்திய தரவரிசைப் பட்டியலில் சிறந்த இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை பல்கலை. தற்போது நிதி நெருக்கடியிலும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிரமப்பட்டு வருகிறது. மொத்தம் 750 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 226 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அதேபோல, 1,400 ஊழியர்கள் பணிபுரியவேண்டிய இடத்தில் 600 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இது வேதனை தரும் செய்தியாகும்.

எனவே, சென்னை பல்கலைக்கழகம் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட தேவையான பேராசிரியர்களையும், பணியாளர்களையும் நியமிக்க தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

\

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x