

சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைதான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரில் செப்.11-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரான ஆர்.பி.வி.எஸ்.மணியன் (74), அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக மாம்பலம் போலீஸாரால் கடந்த செப். 14 -ம் தேதி கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது தனது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மணியன் தரப்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் அவருக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.