Published : 02 Dec 2017 09:27 AM
Last Updated : 02 Dec 2017 09:27 AM

‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி: காஞ்சிபுரத்தில் நாளை நடக்கிறது

‘தி இந்து’ நாளிதழ் ‘கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து நடத்தும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்தியாலயா நிகர்நிலை பல்கலைக் கழக அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெறவுள்ளது.

ஐஏஎஸ் படிக்கவேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிகம் செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, ஐஏஎஸ் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற வழிகாட்டு நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், கடலூர் துணை ஆட்சியர் (பயிற்சி) வீ.ப.ஜெகதீஸ்வரன், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்படவுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் 94442 27273 என்ற செல்போன் எண்ணுக்கு, தங்களது பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி பதிவு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x