

‘எம்.எஸ்.’ என இலக்கிய ஆளுமைகளால் அழைக்கப்படும் எம்.சிவசுப்பிரமணியன் (87) நேற்று காலமானார்.
நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தை சேர்ந்த இவர், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இருந்தும் நாவல்கள் உட்பட பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். குமரி மாவட்டத்தின் சிறந்த படைப்பாளியும், இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையுமான சுந்தரராமசாமி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பொன்னீலன், ஆ.மாதவன், நீல பத்மநாபன், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட பலருக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்ட பெருமையும் இவருக்கு உண்டு. இவரது உடல், சொந்த ஊரான திருப்பதிசாரத்தில் இன்று காலை 10.30-க்கு தகனம் செய்யப்படுகிறது. சிவசுப்பிரமணியனின் மறைவு இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என இலக்கியவாதிகள் தெரிவித்துள்ளனர்.