காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மருத்துவக் கல்லூரிகளில் அக்.1-ல் தூய்மை பணி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மருத்துவக் கல்லூரிகளில் அக்.1-ல் தூய்மை பணி
Updated on
1 min read

சென்னை: அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மகாத்மா காந்தியின் பிறந்ததினமான அக்டோபர் 2-ம் தேதியையொட்டி, நாடு முழுவதும் தூய்மைபணி விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அதற்கு முந்தைய நாளான அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்குஒருங்கிணைந்த தூய்மை பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடிதொடங்கி வைக்கிறார். அந்த நாளில் பொதுமக்களின் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஓரிடத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நியமித்து, இடத்தை தேர்வுசெய்ய வேண்டும். அதுதொடர்பான விவரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை https://swachhatahiseva.com/ என்ற இணைய முகவரியில் பகிர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in