Last Updated : 13 Dec, 2017 11:10 AM

 

Published : 13 Dec 2017 11:10 AM
Last Updated : 13 Dec 2017 11:10 AM

கரை ஒதுங்கிய மீனவர் உடல்களை அடையாளம் காண்பதில் டிஎன்ஏ சோதனைக்கு பிறகும் நீடிக்கும் சிக்கல்

ஒக்கி புயலில் இறந்து கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை டி.என்.ஏ. சோதனைக்கு பின்னரும் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.

ஒக்கி புயலில் சிக்கி மரணம்அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கேரள கடல் பகுதியில் கடந்த 9-ம் தேதி வரை 34 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. இவற்றில் 3 மீனவர் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

மீதம் உள்ள உடல்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை, எர்ணாகுளம் அரசு மருத்துவமனை, கொல்லம் அரசு மருத்துவமனை, திருச்சூர் அரசு மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் இருப்பதால், டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மீனவர்கள் உடல் மற்றும் அதற்கு உரிமை கோரியவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. இதில் 12 மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மீதம் உள்ள 19 மீனவர்களின் உடல்கள் டிஎன்ஏ சோதனைக்கு பின்னரும் அடையாளம் காண முடியவில்லை. இதனால் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதால் அங்கு முகாமிட்டுள்ள தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கேரள அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x