மிலாடி நபி, காந்தி ஜெயந்தி: செப்.28, அக்.2-ம் தேதிகளில் மதுக் கடைகள் மூடல்

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி: செப்.28, அக்.2-ம் தேதிகளில் மதுக் கடைகள் மூடல்
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மிலாடி நபி (செப்.28) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்.2) தினங்களை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள்,

அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் (பார்), அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக் கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக் கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தையும் இரு நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in