

சென்னை: சீமான் மீது அவதூறு பரப்பி வருவதாக, நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி சார்பில் புகார்அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகை விஜயலட்சுமி. 40-க்கும் மேற்பட்ட தமிழ், கன்னடமொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுகடந்த மாதம் 28-ம் தேதி சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், ‘`சீமான்மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்மாலை மாற்றி என்னை திருமணம்செய்து கொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். இதை வெளியே சொல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால் நான் யாரிடமும் சொல்லவில்லை.
இந்நிலையில், அடுத்தடுத்து 7 முறை கர்ப்பமானேன். அதை என்னுடைய அனுமதி இல்லாமலேயே அவர் மாத்திரை மூலம்கருச்சிதைவு செய்தார். இந்நிலையில், அவர் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். என்னிடம் பணம் பெற்றும் மோசடி செய்தார்.இது தொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகார் தொடர்பாக சீமான் மீது 2011-ல் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. எனவே, சீமான் மீதும், அவர் சார்பில் மிரட்டல் விடுக்கும் சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விஜயலட்சுமி, திடீரென தனது புகாரை திரும்ப பெற்றுக் கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார். இதையடுத்து சீமானும்வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜயலட்சுமி, ``என்னை பற்றி சீமான் அவதூறு பரப்பி வருகிறார். இதனால், நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என் சாவுக்குசீமான்தான் காரணம்'’ என அந்தவீடியோவில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் செந்தில் குமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘`தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமியின் தூண்டுதலின்பேரில் நடிகை விஜயலட்சுமி பணம்பறிக்கும் நோக்கத்தில் சீமான் மீதுபொய் புகார் அளித்துள்ளார். அவரது திட்டம் நிறைவேறாததை அறிந்து அப்புகாரை திரும்ப பெற்றுச்சென்றுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி மீண்டும் பணம் பறிக்கும் நோக்கில் சீமான் மீது அவதூறு பரப்புவதுடன், தனது தற்கொலை முயற்சிக்கு சீமான்தான் காரணம் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
எனவே, சீமான் மீது தொடர்ந்துஅவதூறு பரப்பிவரும் விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'’ என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.