Published : 17 Dec 2017 10:51 AM
Last Updated : 17 Dec 2017 10:51 AM

ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வெற்றி பெறும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பு மாற்றி எழுதப்படும். பாஜக வெற்றிபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தண்டையார்பேட்டை அஜிஸ் நகர், குமரன் நகர் பகுதியில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் 21-ம் தேதி 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு வர உள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு டிடிவிதினகரன் பணம் கொடுக்க முயன்ற வழக்கும் அன்று விசாரணைக்கு வருகிறது. மக்களும் அன்றைய தினம் தான் தீர்ப்பை வழங்க உள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பு, சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக இருக்கும். இதுவரை திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் தீர்ப்பை மாற்றி எழுதி, பாஜகவை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறோம்.

இந்த தொகுதியில் சாலை மோசமான நிலை யில் உள்ளது. கழிவுநீர் பிரச்சினை அப்படியே உள்ளது. இது முதல்வரின் தொகுதியா என ஆச்சரியப்பட வேண்டியுள்ளது. இங்கு கவுன்சிலராக இருந்தவரின் மகன்தான் திமுகவின் வேட்பாளர்.

இந்த தொகுதி எம்எல்ஏக்களாக அதிமுகவினர் 17 ஆண்டுகளும், திமுகவினர் 13 ஆண்டுகளும் இருந்துள்ளனர். சென்னையில் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தும் இந்த தொகுதியில் வளர்ச்சி இல்லை. இவற்றை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்போம். மக் கள் எங்களுக்கு வாக்களிப் பார்கள்.

பாஜக வெற்றிபெற்றால் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீனவர்களுக்கான குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x