Published : 23 Sep 2023 06:22 AM
Last Updated : 23 Sep 2023 06:22 AM
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து வரும் 27-ம் தேதி, தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது. இதையொட்டி கர்நாடக அரசை கண்டித்தும், இவ்விவகாரத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தேமுதிக சார்பில் செப்.27-ம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை அருகே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகிக்க உள்ளார். இப்போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT