Published : 23 Sep 2023 05:49 AM
Last Updated : 23 Sep 2023 05:49 AM

கும்பகோணத்தில் அதிக போதைக்காக மதுவில் சானிடைசரை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் பெருமாண்டியை பகுதியை சேர்ந்தவர் மா.பாலகுரு(48), கருணைக்கொல்லை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் த.சவுந்தர ராஜன்(43). தொழிலாளிகளான இவர்கள் உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் இரவு, காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறை பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை அங்கு பாலகுரு, சவுந்தரராஜன் ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் இருவரின் சடலங்களை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் அதிக போதைக்காக மதுபானத்தில் சானிடைசரை கலந்து குடித்தது தெரியவந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் அவர்களது ரத்த மாதிரிகள், அங்கிருந்த மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுக் காக எடுத்துச் சென்றனர். தடயவியல் நிபுணர்களின் அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுக்குப் பிறகே இருவரும் உயிரிழந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x