Published : 23 Sep 2023 05:41 AM
Last Updated : 23 Sep 2023 05:41 AM

திமுக ஆட்சியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்படுகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்ட எல்லையான கொழுமம் பகுதியில் நடைபெற்ற ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

உடுமலை: திமுக ஆட்சியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் கிராமத்தில் ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாநிலத் தலைவர்அண்ணாமலை குமரலிங்கம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த காமராஜர், விவசாயத்தைப் பாதுகாக்க 12 அணைகளைக் கட்டினார். ஆனால் 6-வது முறையாகஆட்சி செய்யும் திமுக, 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது. மாறாக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவருகிறது. தமிழகத்தில் தற்போது 5,500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. காமராஜருக்குப் பின்னர் வந்த யாரும், விவசாயிகளுக்காக எதுவுமே செய்யவில்லை. திமுக ஆட்சியில் கனிமவளம் கொள்ளையடிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா, சர்வதேச அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறிஉள்ளது. 2024 தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராவார். அப்போது இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

வரும் மக்களவைத் தேர்தல், பொதுமக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தலாக அமையும். பாஜக ஆட்சியில் திருக்குறள் 3 அயல் மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

28 கட்சிகள் இணைந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாது. ஆனால், நாட்டைவழிநடத்தக் கூடிய ஆளுமை நிறைந்த நரேந்திர மோடிதான் எங்கள் கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்து, வாக்கு சேகரிக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

8 மாதங்களில் 1,021 கொலை: முன்னதாக நேற்று முன்தினம் இரவு தாராபுரத்தில் அண்ணாமலை பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் 8 மாதங்களில் 1,021 கொலைகள் நடந்துள்ளன. லஞ்சம், ஊழல், ஜாதியப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் சனாதனம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது.

கடன் வாங்குவதில் நம்பர் ஒன்மாநிலமாக தமிழகத்தை மாற்றிஉள்ளனர். அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை தருவோம் என்று கூறிவிட்டு, 60 சதவீத பெண்களைப் புறக்கணித்துள்ளார்கள்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x