Published : 23 Sep 2023 06:04 AM
Last Updated : 23 Sep 2023 06:04 AM
சென்னை: தமிழக அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் மின்சார பேருந்துகளில் பிரச்சினைகள் இருக்காது என போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகளவில் மின்சார பேருந்துகள் பரவலாக இயக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஒருதனியார் பேருந்துதீப்பற்றியது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.
தமிழக அரசு சார்பாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்துதான் வாங்கப்படும். எனவே அதில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது.
வாடகை வாகனங்களைக் கண்காணிக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை தொடர்ந்து மேற்கொள்ளும். நெடுஞ்சாலை உணவகங்களில் சிறப்பான சேவை அளிக்க வேண்டும் என்பதுபொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அதேநேரம், அதிகாரிகளிடம் உணவக உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கையின்படி கழிப்பறைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆதாரத்தோடு புகார்: இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலித்த திண்டிவனத்தில் உள்ள 2உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆதாரத்தோடு புகார் அளிக்கும்போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT