

'டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அல்லது சென்னையில் தேசிய பல்மருத்துவ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய முதியோர் மருத்துவ நிறுவனம் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங்) அமைக்கப்படும்' என்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே முதியோர் சிகிச்சைப் பிரிவு உள்ளது. மாவட்ட தலைநகர மருத்துவமனைகளிலும் முதியோருக்கு சிகிச்சை அளிக்க 10 படுக்கைகளுடன் வார்டுகள் இயங்கிவருகின்றன. முதியோருக்கென தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் தேசிய முதியோர் மருத்துவ நிறுவனம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை சென்னை கே.கே.நகரில் ரூ.180 கோடி செலவில் 200 படுக்கைகளுடன் அமைக்கப்படும். இங்கு முதியோருக்கு காசநோய், இதயநோய் உட்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இங்கு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும். டாக்டர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும். இது சென்னை மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் இயங்கும்.