Published : 26 Dec 2017 04:53 PM
Last Updated : 26 Dec 2017 04:53 PM

அதிமுக அரசு எனது ஆலோசனையின் பேரில் செயல்படவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியற்கு நன்றி: எஸ்.குருமூர்த்தி பதில்

அதிமுக அரசை தான் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், தனது ஆலோசனையின் பேரில் அதிமுக அரசு நடைபெறவில்லை என்ற தவறான கருத்தைப் போக்கியதற்காக அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி எனவும், துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ். குருமூர்த்தி பதிலளித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது, ஆறு மாதங்களுக்கு பிறகு காலதாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என கடுமையாக விமர்சித்து, துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ்.குருமூர்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுபற்றி எஸ். குருமூர்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அரசு எனது ஆலோசனையின் பேரில்தான் செயல்படுகிறது என்ற தவறான கருத்தை போக்கியதற்காக தமிழக அமைச்சருக்கு எனது நன்றி. அவர்கள் அரசை நடத்த, நான் எப்போதுமே ஆலோசனை வழங்கியதில்லை. நான் ஒரு சுதந்திரமான எழுத்தாளர். அரசியல் கட்சிகளும், தலைவர்கள் தங்களுக்குள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை பற்றி, அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, எனது கருத்துக்களை நான் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறேன்.

  guru-1

எடப்பாடி அரசு பற்றி துக்ளக் பத்திரிக்கையின் கேள்வி பதில் பகுதியில் இதேபோன்ற கருத்தை தான் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளேன். அதிமுக தலைமை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது குறித்து நான் கூறிய கருத்துகள் ஒன்றும் புதிதல்ல.

— S Gurumurthy (@sgurumurthy) December 26, 2017

ஊசலாட்டத்தில் இருக்கும் அதிமுக தலைமை, மன்னார்குடி ஆதரவாளர்களுக்கு எதிராக தவணைகளில் நடவடிக்கை எடுக்காமல் விடுத்து, ஒட்டுமொத்த ஆர்.கே.நகரையும் விலைக்கு வாங்க அவர்களை அனுமதித்து, விட்டுவிட்டனர். பணம் கொடுக்கும்போது, அவர்களை காவல்துறையினர் பிடிக்கவில்லை. மாறாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தொடங்கினர்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x