Published : 25 Dec 2017 01:21 PM
Last Updated : 25 Dec 2017 01:21 PM

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்: டி.29 சென்னையில் நடக்கிறது

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்கூட்டம் வரும் டிச.29 அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி, கனிமொழிக்கு பதவி வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்டது. வெல்லும் அல்லது இரண்டாம் இடத்துக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட திமுக தினகரனின் வெற்றியால் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளில் 30 ஆயிரம் வாக்குகளை இழந்தது திமுக.

தேர்தல் தோல்வி என்பதை விட கடந்த முறை பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டது இதுவே முதன்முறை. இந்த தோல்வியிலிருந்து மீண்ட்டுவரவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் வர உள்ள உள்ளாட்சிமன்ற தேர்தலை சந்திக்கவும் வேண்டிய மிகப்பெரிய கடமை திமுக தலைமை முன் உள்ளது.

2ஜி வழக்கில் வெற்றியை கொண்டாடிய திமுக தொண்டர் மறுநாள் தேர்தல் முடிவால் சோர்வடைந்துள்ளதை திமுக தலைமை உணர்ந்தே உள்ளது. இதனால் திமுக தலைமை இது பற்றி உடனடியாக முடிவெடுக்கும் விதத்தில் வரும் டிச.29 அன்று உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தை கூட்ட உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் வரும் டிச.29 மாலை 5 மணிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டதில் திமுகவின் முக்கிய முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி, 2ஜி வழக்கில் வெற்றி, திமுகவில் கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது போன்றவை பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x