Published : 17 Dec 2017 10:55 AM
Last Updated : 17 Dec 2017 10:55 AM

ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 818 குழந்தைகள் மீட்பு

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் நிலையம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்காக ஆர்பிஎஃப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 11 மாத காலத்தில் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்திய மற்றும் திருடிய 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சட்டத்துக்கு புறம்பாக ரயில்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 263 பேர் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரயில்வே விதிகளை மீறிய சுமார் 1 லட்சம் நபர்களிடம் இருந்து சுமார் ரூ.3.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், ரயில் நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 818 குழந்தைகள் மீட்கப்பட்டனர். மேலும், ட்விட்டர் மூலம் பெறப்பட்ட 412 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x