Published : 20 Sep 2023 06:09 AM
Last Updated : 20 Sep 2023 06:09 AM
சென்னை: அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.என்.பதக் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், பாரதிய பிரதிரக் ஷா மஸ்தூர் சங்கத்தின் துணைத் தலைவர் சாது சிங், பொதுச் செயலாளர் முகேஷ் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.சவ்பே, பொதுச் செயலாளர் அஜய் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து பாதுகாப்புத் துறை தளவாட தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றியது. பின்னர், 2 ஆண்டுகளுக்குள் அவற்றை ஒன்றிணைத்து 4 கார்ப்பரேஷன்களாக குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்புத் துறை நிறுவனங்களை கார்ப்பரேஷன்களாக மாற்றியது முற்றிலும் தோல்வியாகும். கடந்த 2021 செப்.30-ம் தேதிக்கு முன்பிருந்தபடி 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளாக மீண்டும் செயல்படுத்த வேண்டும். இது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்நிலையில், வரும் அக்டோபர் முதல் வாரம் கார்ப்பரேஷன் தினமாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
அதுமட்டுமின்றி, அக்.3-ம் தேதி கார்ப்பரேஷன்களை விலக்கும் தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்துகொள்வதாடு அனைத்து பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT