Published : 20 Sep 2023 06:15 AM
Last Updated : 20 Sep 2023 06:15 AM

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட சர்வர் முடக்கம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்ட உதவி மையம்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் கலைஞரின் மகளிர்உரிமைத் தொகை திட்ட சர்வர்முடக்கியதால், மீண்டும் விண்ணப்பிக்க முடியாமல் பெண்கள் அவ திக்குள்ளாகினர்.

தமிழ்நாட்டில், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000வழங்கும் திட்டம், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில் பதிவு செய்தவர்க ளில் 1 கோடியே 60 லட்சம் நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகைவழங்கப்பட்டுள்ளது. மகளிர்உரிமை தொகை நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டுள்ளது என தகவல்தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்.இத்திட் டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் விண்ணப் பிக்க ஆட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங் கள், ஊராட்சி ஒன்றிய அலுவலங்க ளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.

இதன்படி விழுப்புரம் மாவட்டத் தில் இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், இ-சேவைஉதவி மையம் மூலம் விண்ணப்பிக்க நேற்று வந்தனர். அப்போது சர்வர் முடங்கியதால் குடும்ப தலைவிகள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இதனால் அவர்களின் ரேஷன் கார்டு எண்ணை இ-சேவை மைய ஊழியர்கள் குறித்து வைத்து கொண்டனர்.இதன் மூலம் அவர்களின் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணத்தை தெரிந்து கொண்டு தகவல்தெரிவிக்கப்படும். அதுவரை அங்குகாத்திருக்குமாறு தெரிவித்தனர். ஆனால் சர்வர் முழுவதும் முடக்கியதால் இணையதளம் மூலம் இந்த தகவலை பெறவில்லை.

இதை தொடர்ந்து வருகை புரிந்த பெண்களிடம் ஆதார் எண், மொபைல் எண் ஆகியவை பெறப்பட்டன. சர்வர் சரியானதும் விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல் அனுப்பிவைக்கிறோம் என அங்கு வருகை புரிந்த மகளிரை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அனுப்பிவைத்தனர். இதற்கிடையே விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல் பட்டு வரும் இ-சேவை மையத்தில் ஆட்சியர் பழனி நேற்று ஆய்வு நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x