ரூ.1000 கோடி பங்குகள் ஏலம் தமிழக அரசு அறிவிப்பு

ரூ.1000 கோடி பங்குகள் ஏலம் தமிழக அரசு அறிவிப்பு

Published on

தமிழக அரசு ரூ.1000 கோடி மதிப்பிலான பங்குகளை ஏலம் மூலம் விற்பனை செய்யவுள்ளது. இதுகுறித்து அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரூ.1000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை – கோட்டை அலுவலகத் தில் ஜூலை 8-ம் தேதி நடத்தப்படும்.

போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 முதல் 12 மணிக் குள்ளும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 முதல் 11.30 மணிக்குள்ளும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் ஜூலை 8-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in