Published : 18 Sep 2023 07:50 AM
Last Updated : 18 Sep 2023 07:50 AM

கூட்டணியை முறிக்க பார்க்கிறார் அண்ணாமலை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. ஆவேசம்

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி.

விழுப்புரம்: கூட்டணியை முறிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார். அதிமுக வெற்றிபெற கூடாதென திமுகவின் கைக்கூலியாக பேசுகிறார் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் அருகே கோலியனூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. பேசியதாவது: அண்ணாவை இழிவுபடுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுங்கள் அண்ணாமலை. இனியும் எங்களை வாழவைத்த தலைவர்களை பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள 'நானும் ரவுடிதான்' என வடிவேல் சொல்வதைப்போல நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார். அதற்காக எங்கள் தலைவர்களை இழிவுபடுத்த வேண்டாம்.

இந்தக் கூட்டணியை முறிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார்.

இதேபோல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தால், ஒருமுடிவை எடுக்க வேண்டும் என எங்கள் தலைமையை நாங்களும் வலியுறுத்துவோம். அதிமுக துணை இல்லாமல் பாஜக வெற்றிபெற முடியாது. மோடி மீண்டும் பிரதமராவதற்கு அண்ணாமலைக்கு விருப்பமில்லை போலும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வெற்றிபெற கூடாதென, திமுகவின் கைக்கூலியாக அண்ணாமலை பேசுகிறார். அதனால்தான் திமுகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு அதிமுகவை விமர்சிக்கிறார்.

உங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்களை விமர்சனம் செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவுக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x