கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க ஆவின் நிறுவனம் திட்டம்

கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க ஆவின் நிறுவனம் திட்டம்
Updated on
1 min read

கறவை மாடுகளுக்கும், பால் முகவர்களுக்கும் காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கால்நடைகள் இழப்பால் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்கள், தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், பசு, எருமை, ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவற்றுக்கு காப்பீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. காப்பீடு கட்டணமாக, ரூ.600 முதல் ரூ.700 வரை வசூல் செய்யப்படும்.

இதில், 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். மானியத்தை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். நடப்பாண்டு, 50 சதவீத கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,

காப்பீடு: இது குறித்து ஆவின் அதிகாரிகளுக்கு நந்தனத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆவின் பால் முகவர்களுக்கும் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கிகளிடம் கருத்து கேட்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, சென்னையில் உள்ள பால் முகவர்களை அழைத்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in