Published : 23 Dec 2017 09:49 AM
Last Updated : 23 Dec 2017 09:49 AM

பேஸ்புக், ட்விட்டர் மூலம் காஸ் சிலிண்டர் முன்பதிவு

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு செய்யும் முறை தொடங்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், வீடுகள் மற்றும் கடை களுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்கள், எண்ணெய் நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வடஇந்தியாவில்...

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்கள் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, முதற்கட்டமாக வடஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்சேவை விரைவில் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்படும். இத்தகவலை இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x