

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார். கனகராஜின் சகோதரர் தனபால் சமீபகாலமாக கோடநாடு வழக்கு தொடர்பாக அளித்துவரும் பேட்டிசமூக வலைதளங்களில் அதிகமா கப் பரவி வருகிறது.
இந்நிலையில், கோடநாடு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி தனபால் பேச தடை விதிக்கக் கோரிமுன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தனபால், இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பொய்யான தகவல்களை பொது வெளியில் கூறி வருகிறார்.
அடுத்தாண்டுமக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் தனபால் இதுபோல பேட்டியளித்து வருகிறார். அவர் ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்டவர். மேலும், தான் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன்பெற்றுள்ளார். எனவே இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்என கோரியுள்ளார். இந்தவழக்கு செப்.19-ல் விசாரணைக்கு வருகிறது.