

செங்கல்பட்டு: தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சண்முகம் சாலையில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்,அதிமுக பொதுச் செயலாளர் மற்றும்எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமிபங்கேற்றார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு: திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்பணம் வழங்கப்பட்டது. திமுக அரசு இரண்டரை ஆண்டுகளில் ரூ.2.73 லட்சம் கோடிகடன் வாங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.