

சென்னை: சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வீரலட்சுமி புகார் அளிக்க வந்திருந்தார். அப்போது, விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருப்பதாகவும், சீமானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கூடி, வீரலட்சுமியை முற்றுகையிட முயன்றனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தார். இந்நிலையில், அனுமதியின்றி முற்றுகை போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அய்யனார், நிர்வாகிகள் சசிக்குமார், மணி உள்ளிட்டோர் மீது வேப்பேரி போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.