சென்னை வளர்ச்சி பணிகள்: முதல்வர் தலைமையில் செப் 21, 22-ல் ஆய்வு

சென்னை வளர்ச்சி பணிகள்: முதல்வர் தலைமையில் செப் 21, 22-ல் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: மாவட்டந்தோறும் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசால் புதிதாக அறிவித்து, செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையில், மாவட்டம் வாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், பல்வேறு துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், மேற்கு, தெற்கு,வடக்கு மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அண்மையில்டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றகள ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்நிலையில், சென்னை மண்டலஅளவிலான ஆய்வுக் கூட்டம் வரும் 21, 22-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகளை முதல்வர் 2 நாட்களுக்கு ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வுக் கூட்டம் சென்னை அல்லது செங்கல்பட்டில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in