Published : 12 Dec 2017 02:59 PM
Last Updated : 12 Dec 2017 02:59 PM

சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு எதிரொலி: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #JusticeForKausalya

சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில், இளம்பெண் கவுசல்யாவுக்கு நியாயம் கிடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ட்விட்டர் தளத்தில் #JusticeForKausalya என்ற ஹேஷ்டேக் கீழ் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து ட்விட்டரில் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், "திருப்பூர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இனியும் சாதி ஆணவக் கொலைகளை ஏற்க முடியாது என்ற அழுத்தமான செய்தியை இதன் மூலம் நீதிமன்றம் கடத்தியிருக்கிறது. 6 பேருக்கு தூக்கு, ஒருவருக்கு இரட்டை ஆயுள், ஒருவருக்கு  5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. இது உண்மையில் அசாதாரணமான தீர்ப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x