125 ஆண்டுகால பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக 11 பெண் நீதிபதிகள்: மூன்றில் ஒரு பங்காவது பெண் நீதிபதிகளை நியமிக்க வழக்கறிஞர் வி.நளினி கோரிக்கை

125 ஆண்டுகால பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக 11 பெண் நீதிபதிகள்: மூன்றில் ஒரு பங்காவது பெண் நீதிபதிகளை நியமிக்க வழக்கறிஞர் வி.நளினி கோரிக்கை
Updated on
1 min read

125 ஆண்டு கால பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 பெண்நீதிபதிகளுடன் சேர்த்து மொத்தம் 11 பெண் நீதிபதிகள் பணியாற்ற உள்ளனர். இவ்வளவு பெண் நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரிவது இதுதான் முதன்முறை என்கின்றனர்பெண் வழக்கறிஞர்கள்.

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் 47-வதுதலைமை நீதிபதியாகவும், இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாகவும் இந்திரா பானர்ஜி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆளுகைக்குஉட்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் தவிர்த்து மதுரையில்உயர் நீதிமன்ற கிளை செயல்பட்டு வருகிறது.

தற்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்த்து நீதிபதிமுனைவர் எஸ்.விமலா, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நீதிபதிவி.எம்.வேலுமணி, நீதிபதி ஜெ.நிஷாபானு, நீதிபதி அனிதா சுமந்த்,நீதிபதி வி.பவானி சுப்பராயன் ஆகிய 7 பேர் பெண் நீதிபதிகளாகஉள்ளனர்.

இந்நிலையில் தற்போது புதிய பெண் நீதிபதிகளாகஎஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, ஆர்.ஹேமலதா, டி.கிருஷ்ணவள்ளிஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுடன் சேர்த்து ஆர்.பொங்கியப்பன், பி.ராஜமாணிக்கம்ஆகியோரும் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பதவிப்பிரமாணம் விரைவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் நீதிபதிகளையும் கணக்கில்எடுத்துக்கொண்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும்பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றிலேயே இவ்வளவுபெண் நீதிபதிகள் பணியாற்றுவது இதுதான் முதன்முறைஎன்கின்றனர் மூத்த பெண் வழக்கறிஞர்கள்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள்சங்கத் தலைவர் வி.நளினி ‘‘ தி இந்து’’ விடம் கூறுகையி்ல், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்தநீதிபதிகளின் எண்ணிக்கை 75. அதில் தற்போது புதிதாகநியமிக்கப்படவுள்ள 6 நீதிபதிகளுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்றத்திற்கென தனிபாரம்பரியம் உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தேசென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிவது அவ்வளவுகவுரவமாகவும், பெருமையாகவும் கருதப்படுகிறது. இந்த உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என ஒவ்வொரு முறையும் நீதிபதிகளின் பதவியேற்புவிழாவின் போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்னைக்குவருகை தரும்போதும் தொடர் கோரிக்கை விடுத்து வருகிறோம்.இந்தமுறை 4 பெண் நீதிபதிகள் புதிதாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பெண் நீதிபதிகள்பணியாற்றுவது என்பது எனக்கு தெரிந்து இதுதான் முதன்முறை.ஆனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள 4 பெண் நீதிபதிகளும்,ஏற்கெனவே மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்தவர்கள். சென்னைஉயர் நீதிமன்றத்தில் மூன்றில் ஒரு பங்காவது பெண் நீதிபதிகளைநியமிக்க வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. எனவேஇத்துடன் நின்று விடாமல் எஞ்சியுள்ள காலியிடங்களில்நீதிபதிகளுக்கான பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதகுதிவாய்ந்த மூத்த பெண் வழக்கறிஞர்களையும் நியமிக்கவேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in