Published : 14 Sep 2023 05:56 AM
Last Updated : 14 Sep 2023 05:56 AM
சென்னை: அரசியல் காரணங்களுக்காகவே விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படுவதாகவும், சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டுமென விநாயகர் கூறவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள் ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் 13 இடங்களிலும், கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி கோரி இந்து மக்கள் கட்சிசார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, காவல் துறை சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை வைக்க அனைத்து அமைப்புகளுக்கும் அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, அதன்படி அனுமதி வழங்கி வருகிறது. அந்தந்த பகுதிகளில் நிலவும் சட்டம்-ஒழுங்கை கருத்தில்கொண்டு, விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிகோரும் மனுக்கள் மீது உள்ளூர் போலீஸார் முடிவு எடுத்து வரு கின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கைப் பொருத்தமட்டில், கடந்த ஆண்டு சிலை வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர், கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கோருவ தாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிமனுதாக்கல் செய்தால், அந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படாது என்று கூறி, வழக்குகளை முடித்துவைத்தார். மேலும், சிலை வைத்து, அவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றுவிநாயகர் கூறவில்லை என்று தெரிவித்த நீதிபதி, இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அரசியல் காரணங்களுக்காகவே விநாயகர் சதுர்த்திஊர்வலங்கள் நடத்தப்படுவதாக வும் தெரிவித்த நீதிபதி, இந்த கருத்துகள் அனைத்தும், தனது சொந்த கருத்துகள் என்றும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT