திமுக தலைமையிலான சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் செப்.19-ல் 2-வது தேசிய மாநாடு: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்

திமுக தலைமையிலான சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் செப்.19-ல் 2-வது தேசிய மாநாடு: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்
Updated on
1 min read

சென்னை: திமுக தலைமையிலான சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2-வது தேசிய மாநாடு செப்.19-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றுகிறார்.

திமுக சார்பில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டுதொடங்கினார். இந்த கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதையேற்று, பல்வேறு தேசிய, மாநில கட்சிகள் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ளன.

இந்த கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு கடந்த ஏப்ரல் மாதம்காணொலி வாயிலாக நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா,உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிகதலைவர் திருமாவளவன், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.‘நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2-வது மாநாடு, வரும் 19-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாகப் பங்கேற்று பேசுவார் என திமுக வட்டாரங்கள் தெரி வித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in