Published : 14 Sep 2023 05:06 AM
Last Updated : 14 Sep 2023 05:06 AM

தேமுதிக தொடங்கி 18 ஆண்டு நிறைவு; 2024 தேர்தலில் கட்சியின் பலத்தை நிரூபிப்போம்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம்

சென்னை: தேமுதிக தொடங்கி 18 ஆண்டு நிறைவுபெற்ற நிலையில், 2024நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் பலத்தை நிரூபிப்போம் என விஜயகாந்த் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மக்கள் இதயங்களில் இடம்: பல்வேறு சவால்களைத் தாண்டி, நல்ல நோக்கத்துக்காக தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று (செப்.14) 19-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தேமுதிகவுக்கு என தனி வரலாறு உண்டு. எந்த கட்சியிடம் இருந்தும் பிரிந்து வராமல், லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பிக்கப்பட்ட கட்சி, மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத் தைப் பிடித்துள்ளது.

கட்சி தொடங்கிய நாள்முதல் இன்றுவரை யாரிடமும்பணத்தை வசூல் செய்ததில்லை. சொந்த உழைப்பில்கட்சியை வளர்த்து வருகிறோம். பல வெற்றி, தோல்விகளைக் கடந்து இன்றும் நாம்வீறுநடை போடுகிறோம் என்றால் அதற்குக் காரணம் தொண்டர்கள்தான். வரவிருக்கும் 2024நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் பலத்தை அனைவருக்கும் நிரூபிப்போம்.

உறுதியேற்போம்: 19-ம் ஆண்டு தொடக்க நாளில் எழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச்செய்து சிறப்பாக கொண்டாடுவோம். வரக்கூடிய தேர்தல்களை உறுதியோடு சந்திப்போம். நமது முரசு, நாளை வெற்றி முரசாக எட்டுத் திக்கும் கொட்ட, இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x