Published : 14 Sep 2023 05:10 AM
Last Updated : 14 Sep 2023 05:10 AM
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், அதற்கான குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இ-சேவைமையம் வாயிலாக மேல் முறையீடுசெய்யலாம்.
இதுகுறித்து சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஸ்அகமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்க தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் பெறப்பட்டவிண்ணப்பங்கள் அனைத்தும், அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
மேலும், அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம்சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிகளைப்பூர்த்தி செய்த, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப்பூர்த்தி செய்யாத விண்ணப்பங் களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்பட வில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்.18 முதல் அனுப்பப்படும்.
இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய் யப்படும் மேல்முறையீடுகள், அரசுதகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப் பட்டால், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின் மைகள் தொடர்பாக தனி நபர் மூலம்வரும் புகார்கள் குறித்த விசாரணைஅலுவலராகச் செயல்படுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT