

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் வரும் அக்.16-ம் தேதிதொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்.21-ம்தேதி முடிவடைந்து, தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அதன்படி அக்டோபர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தைநடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அக்.3, 4 -ம் தேதிகளில் மாவட்டஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறஉள்ளது. இதையடுத்து, அக். 16-ம் தேதி பேரவைக்கூட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்கள் நடத்தப்படலாம் என தகவல்வெளியாகியுள்ளது. பேரவைக் கூட்டத்தை நடத்த தேவையான ஏற்பாடுகளை பேரவை செயலகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த கூட்டத்தொடரில் முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும், அதே நேரம் காவிரி விவகாரம், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விஎழுப்பலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.