

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக நிலக்கோட்டை, ஆத்தூர் தொகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நிலக்கோட்டை பள்ளியில் படிக்கும் மாணவிகள் பீர் குடித்த தாக பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. தமிழகத்தில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ மது குடிக்கும் கலாச்சாரம் மட்டும் வளர்ந்துள்ளது. 60 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை இல்லை.
தமிழகத்தில் 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. 35 அமைச்சர்களில் மூன்றில் ஒரு பகுதி. எனவே, திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர். மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.