Published : 15 Apr 2014 10:32 AM
Last Updated : 15 Apr 2014 10:32 AM

தமிழகத்துக்கு கூடுதலாக 25 ஐஏஎஸ் பணியிடங்கள் வழங்க மத்திய அரசு மறுப்பு: குஜராத், கேரளாவுக்கு மட்டும் அதிக இடங்கள்

தமிழகத்துக்கு கூடுதலாக 25 ஐஏஎஸ் பணியிடங்கள் வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. அதேநேரத்தில் குஜராத், கேரளா மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் 6,100-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள்தொகை எண் ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக் கையிலான ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் (கேடர் ஸ்ட்ரென்த்) ஒதுக்கீடு செய்யப்படும்.

அந்த வகையில், இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 592 ஐஏஎஸ் பணியிடங் களிம், மத்தியப் பிரதேசத்துக்கு 417 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கை 355 ஆகும். இதில், மூன்றில் 2 பங்கு இடங்கள் (247) நேரடி ஐ.ஏ.எஸ். பணி யிடங்கள். 108 இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் இடங்கள்.

தமிழக அரசு கோரிக்கை

ஐ.ஏ.எஸ். பணியிடங்களின் எண் ணிக்கையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரித்துக் கொள்ளலாம். புதிதாக உருவாக்கப்படும் பதவிகள், புதிய திட்டங்களால் ஏற்படுத்தப்படும் தற்காலிக பதவிகளை நிரந்தரம் செய் வது உள்ளிட்ட நிர்வாக வசதிகளுக்காக மாநில அரசுகள் கூடுதலாக கேட்கும் ஐஏஎஸ் பணியிடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிடுவது வழக்கம். தமிழகத்தில் கடைசியாக 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியிடங் கள் எண்ணிக்கை திருத்தியமைக் கப்பட்டது. அப்போது 10 சதவீத இடங்கள் அதிகரித்தன.

இந்த நிலையில், கூடுதல் பதவிகள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை கருத் தில்கொண்டு ஐஏஎஸ் இடங்களின் எண்ணிக்கையை 12 சதவீதம் (25 இடங்கள்) அதிகரிக்குமாறு தமிழக அரசு, கடந்த மே மாதம் மத்திய பணி யாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசு மறுப்பு

ஆனால், பணியிடங்களின் எண் ணிக்கையை 5 சதவீதம் மட்டுமே அதிகரிக்க முடியும் என்று புதிதாக ஒரு விதிமுறையை கொண்டுவந்து அதனை பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியது. இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வுசெய்து முடிவுசெய்யுமாறு பிரதமர் அலுவலகம் பணியாளர் துறைக்கு தகவல் அனுப்பியது.

இத்தகைய சூழலில், தமிழகத் தில் ஐ.ஏ.எஸ். இடங்களின் எண் ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான கோப்பு பணியாளர் துறையிடம் 4 மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. 5 சதவீதம் மட்டும் இடங் களை அதிகரிக்கும் மனநிலையில் மத்திய அரசு இருந்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரளாவுக்கு கூடுதல் பணியிடங்கள்

அதேநேரத்தில் குஜராத், கேரளா மாநிலங்களுக்கு இதுபோன்று எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. கேரளாவுக்கு 9 சதவீத இடங்களை அதிகரிக்கவும், குஜராத்துக்கு 15 சதவீத இடங்களை (17 சதவீதம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது) அதிகரிக்கவும் கடந்த பிப்ரவரி ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

குஜராத்துக்கும் கேரளாவுக்கும் ஐஏஎஸ் பணியிடங்களை கேட்ட அள வுக்கு அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழகம் மீது மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக அரசு நிர்வாக வட்டாரத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x