

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகி்த்து வந்த ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமி்க்க சமீபத்தில் உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம் மத்திய அரசு வாயிலாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி இந்த நீதிபதிகள் 5 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.