விரைவில் மீண்டும் புரட்சிப் பயணம்: ஓபிஎஸ் தகவல்

விரைவில் மீண்டும் புரட்சிப் பயணம்: ஓபிஎஸ் தகவல்
Updated on
1 min read

மதுரை: விரைவில் மீண்டும் புரட்சிப் பயணம் தொடங்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா என்பதை பாரத் என மாற்றி முறையான அரசாணை வெளியிடப்படவில்லை. அவ்வாறு அறிவிப்பு வெளியான பிறகு, அது குறித்து பேசலாம்.

தொண்டர்கள் விருப்பத்தின்படி விரைவில் மீண்டும் புரட்சிப் பயணத்தைத் தொடங்க உள்ளேன். சென்னையில் நடந்தது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல. அது ஒரு குழுவின் கூட்டம் என்றார்.

இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஒரே அரசு திமுக அரசுதான் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது பற்றி கேட்டபோது அவர் கூறுவதையெல்லாம் ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in